காதலியுடன் முத்த மழை பொழிந்த பிரபல கடத்தல் மன்னன்..! புகைப்படத்தால் சிக்கிய காதலன்..!!

காதலியின் முத்தத்தால் போலீசாரிடம் பிரபல போதைபொருள் கடத்தல் மன்னன் மாட்டிக்கொண்டார்.

காதலியுடன் முத்த மழை பொழிந்த  பிரபல கடத்தல் மன்னன்..! புகைப்படத்தால் சிக்கிய காதலன்..!!

மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ என்பவர் சுமார் 200 நாடுகளுக்கும் மேல்  தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார். இவரை கைது செய்வதற்காகவே 196 நாடுகளில்  இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறபிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெர்டுகோ இதுவரையிலும் தலைமறைவாக தான் இருந்து வந்தார்.

இந்நிலையில் பெர்டுகோ தனது காதலியுடன் கலியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் மலை உச்சியில் குதுகலமாக இருந்துள்ளார். அப்போது பெர்டுகோ தனது காதலியை முத்தமிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை காதலி தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

இதனையடுத்து புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக தொடங்கியதும் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கொலம்பிய அதிகாரிகளை எச்சரித்தது, இதைத்தொடர்ந்து  அவர் கைது செய்யப்பட்டார். மேலும் போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பெர்டுகோ இப்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.