இந்தியாவில் பதிவான முதல் ஒமிக்ரான் மறைவு..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 73  வயதான முதியவர் ஒமிக்ரான் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் பதிவான முதல் ஒமிக்ரான் மறைவு..

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் டிசம்பர் 31 ஆம் தேதியன்று உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.முதியவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிர்களை சோதனை செய்ததில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமிக்ரானில் முதல் மரணமாக முதியவரின் மரணம் பதிவாக்கப்பட்டுள்ளது.

முதல் ஒமிக்ரான் மரணம் உறுதியானது அடுத்து இதனை பற்றி மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளாரான லாவ் அகர்வால் கருத்து தெரிவிக்கையில் ராஜஸ்தானில் முதல் மரணம் பதிவாகியுள்ளது எனவும் அந்த முதியவருக்கு நீரிழிவு நோய்கள் போன்றவை இருந்ததாகவும்  கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முதியவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களும் இருந்த நிலையில் கோவிட் நிமோனியா தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

தற்போதைய கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும்  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் அவை 2135 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 நாட்களில் மட்டும் இந்தியாவில் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கையானது 6.3 மடங்குகளை விடவும் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிய வந்தது.இதில் மகாராஷ்டிரா ,மேற்கு வங்கம்,கேரளா,டெல்லி ,கர்நாடகா,தமிழ்நாடு ,குஜராத் ஆகிய மாநிலங்களில்  கோவிட் தொற்று அதிகரித்து வரும் கவலைக்குரியதாக உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டிலுள்ள 28 மாவட்டங்கள் புதிய தொற்றுகள் வாரத்திற்கு 10%க்கும் அதிகமாகவும், 43 மாவட்டங்களில் வாரத்திற்கு புதிய தொற்று 5-10% வரையிலும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளது.