துருக்கி நாட்டின் பெயர் ‘துர்க்கியே’ என மாற்றம் - பெயர் மாற்றத்தை அங்கீகரித்த ஐ.நா !

துருக்கி நாட்டின் பெயர் ‘துர்க்கியே’ என மாற்றம் - பெயர் மாற்றத்தை அங்கீகரித்த ஐ.நா !

துருக்கி நாட்டின் பெயரை மாற்ற விருப்பம் தெரிவித்த அந்நாட்டு அதிபர் எர்டோகன் கோரிக்கைக்கு ஐநா ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்வது குறித்து கடந்த ஆண்டு அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச அளவில் அங்கீககாரம் கிடைக்க வேண்டும் என விரும்பிய  அதிபர் தயிப் எர்டோகன் இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரெஸுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் கோரிக்கையை பரிசீலனை செய்த அன்டனியோ குட்ரெஸ், துருக்கி நாட்டின் பெயர் இனி "துர்க்கியே" என அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.