பழங்கால மம்மிக்கு சிடி ஸ்கேன் எடுத்த போது வெளிவந்த உண்மை.! அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.! 

பழங்கால மம்மிக்கு சிடி ஸ்கேன் எடுத்த போது வெளிவந்த உண்மை.! அதிர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.! 

இத்தாலியில், பழங்காலத்து எகிப்திய மம்மி ஒன்றுக்கு ஆராய்ச்சியாளர்கள் சிடி ஸ்கேன் எடுத்ததில் அது .20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி மம்மி என்பது தெரியவந்தது.  

மம்மிகளை கொண்டு பல கட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், உயிரிழக்கும்போது அவர்களது வயது என்ன உள்ளிட்ட விவரங்களை உறுதி செய்து வருகின்றனர். அண்மையில் எகிப்தில் வசிக்கும் ஒருவர், இத்தாலி தூதரகத்திற்கு மம்மி ஒன்றை வழங்கியுள்ளார். அதனை சிடி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், அந்த மம்மி கி. மு.900களில் வாழ்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர். 

மம்மி பற்றிய கூடுதல் தகவலுக்காக சிடிஸ்கேன் எடுப்பதாக தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர் ஒருவர், போலந்து வார்ஸாவில், ஆண் சடலம் என நினைத்து மம்மியை சிடி ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அது 20 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி மம்மி என அடையாளம் தெரிந்ததாக கூறினார்.