20 வருடங்களுக்குப் பிறகு வெளியேறிய அமெரிக்கா.. தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் வரும் ஆப்கானிஸ்தான்.? 

20 வருடங்களுக்குப் பிறகு வெளியேறிய அமெரிக்கா.. தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் வரும் ஆப்கானிஸ்தான்.? 

20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா தாலிபான் அமைப்பு ஆண்டுகொண்டிருந்த ஆப்கானிஸ்தான் மேல் படையெடுத்தது.அதன்பின் அங்கு தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டு ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானின் நிலைகொண்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசின் கொள்கை படி மே 1ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானின் பாக்ராம் பகுதியில் அமெரிக்க வீரர்கள் முதன்முதலாக முகாமிட்டனர். இங்கிருந்த விமான தளத்தில் இருந்து 20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறியுள்ளது.  

இதனால், தாலிபன்களின் செல்வாக்கு அங்கு அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில், ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை தாலிபன் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.