1019 எழுத்துக்கள் கொண்ட ஒரு பெண்ணின் நீளமான பெயர்!!

உலகிலேயே மிக நீளமான பெயரை வைத்துள்ள பெண் அமெரிக்காவில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

1019 எழுத்துக்கள் கொண்ட ஒரு பெண்ணின் நீளமான பெயர்!!

இவரது தாயின் பெயரை குறிப்பிட்டு இவரை அழைக்கும் விதத்தில் இவரது பெயர் நீளமாக உள்ள நிலையில் இவரின் பெயரை உச்சரிப்பது என்பதனையே கடிமான செயலாக இருப்பதாக கருதுகின்றனர்.1984 ல் பிறந்த சாண்ட்ரா வில்லியம்ஸ் என்பவருக்கு மகளாக பிறந்தவருக்கு தான் உலகிலேயே நீளமான பெயர் உள்ளதாக சொல்லப்படுகிறது.சாண்ட்ராவிற்கு மகள் பிறந்த நிலையில் அவருக்கு  Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams என பெயர் வைத்துள்ளார்.ஆனால் இதனை மாற்றி அமைத்துக் கொள்ள அவரது மகள் விரும்பியதால் அவரின் பெயரை மற்றொரு முறை மாற்றியுள்ளனர்.

அவருக்கு பெயரில் சிறிது மாற்றங்களை அவரது தாயார் ஏற்படுத்தியுள்ளார்.அந்த பெயரானது Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenen என்றவாறு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிறப்பு சான்றிதழ்களையும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.

அவரின் பெயர் பெரிதாக இருப்பதால் அவர் பிறப்புச் சான்றிதழ் மட்டும் 2 அடி நீளம்  வரை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து இவர் உலகிலேயே நீளமான பெயரை வைத்துள்ளதாக கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளார்.அதன் பின் வேறு யாரும் இதை விட நீளமான பெயரை வைக்க முடியவில்லை. இந்த பெண்ணின் பெயரை எப்படி உச்சரிப்பது என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம் இது ரொம்ப கஷ்டம் தான் ஆனால் இவருக்கு ஒரு செல்லப்பெயர் இருக்கிறது. அதன் படி இவரை ஜிய்மி என்று தான் இவரது தோழிகள் அழைக்கிறார்கள்.

1997இல் இவரும் இவரது தாயும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசினார். அப்பொழுது தான் இந்த பெண்ணின் பெயர் நீளமாக இருக்கும் விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. பின்னர் அமெரிக்கா அரசு ஒரு சட்டத்தை வெளியிட்டது.இந்த சம்பவத்திற்கு  பிறகு பிறப்பு சான்றிதழில் உள்ள கட்டங்களுக்குள் எழுதும்படியே அவரது அதிகாரப்பூர்வ பெயர் இருக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதனால் அமெரிக்காவில் அதை விட நீளமான பெயர் வைக்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது.