85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ்... 2 வாரங்களில் 11 நாடுகளுக்கு பரவியுள்ளது...

புதிதாக உருவெடுத்துள்ள டெல்டா வைரஸ், உலகம் முழுவதும் 85 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ்... 2 வாரங்களில் 11 நாடுகளுக்கு பரவியுள்ளது...
சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதிலும் அதிக தொற்று தன்மை கொண்டதும், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரசுமான டெல்டா, 85 நாடுகளில் தன் கைவரிசையை காட்டி உள்ளது. இவற்றில் 11 நாடுகளில் 2 வாரங்களில் பரவி இருக்கிறது
 
இதேபோக்கு தொடர்ந்தால் இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் டெல்டா வைரஸ் தொற்று அதிகளவு ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கை அல்லது இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. டெல்டா வைரசுக்கு எதிராக பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனகோ தடுப்பூசியும் வலுவாக செயல்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.