நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தன்னை காப்பாற்றுமாறு... இளைஞர் ஒருவர் வைத்த விநோத விளம்பர பலகை !!

காதலித்து திருமணம் செய்து கொள்ள பெண் வேண்டும் என்பதற்காக தனி இணையப்பக்கத்தை உருவாக்கி தன்னை பற்றிய விவரங்களை குறிப்பிட்டுள்ளார் லண்டனை சேர்ந்த 29 வயதான இளைஞர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தன்னை காப்பாற்றுமாறு... இளைஞர் ஒருவர் வைத்த விநோத விளம்பர பலகை !!

முஹம்மது மாலிக் என்ற 29 வயதான நபர் தற்போது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இருந்து தன்னை விடுவிக்கும் வகையில் விளம்பர பலகையை வைத்து அதனை இணைய பக்கத்திலும் பதிவிட்டு வந்துள்ளார்.இங்கிலாந்தை சேர்ந்தவரான இவர் பஞ்சாபியைச் சேர்ந்த இளங்கலையில் மனைவி கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் விளம்பர பலகை நிறுவியதாக சொல்லப்படுகிறது.

லண்டன் பகுதியில் பர்மிங்காம் தெருக்களில் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் ஊதா நிறத் திரையில் படுத்துக்கொண்ட நிலையில் நிச்சயித்த திருமணத்திலிருந்து என்னை காப்பாற்றுங்கள் என ஒரு வரியை குறிப்பிட்டு அவர் வைத்த விளம்பர பலகையை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்ததாக தெரிவிக்கின்றனர்.

இவர் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில் முஹம்மது மாலிக் உடன் ஃபைண்ட்ஸ் மாலிக் எ வைஃப் என்ற இணைய பக்கத்தின் இணைப்பு இருந்ததாக தெரிகிறது.இது குறித்து அவர் இணையத்தில் பதிவிட்டிருப்பதாவது எனக்கு இன்னும் சரியான மனைவி கிடைக்கவில்லை எனவும் வெளியே பெண் தேடி அலைவது கடினமாக இருப்பதால் விளம்பர பலகையை வைத்ததாகவும் அதில் குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் எனது துணைவியானவள் இருபதுகளில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருப்பாள், அவளின் தன் நம்பிக்கையை மேம்படுத்துவதில் அர்பணிப்புடன் இருப்பாள் எனவும் தான் ஒரு சத்தமில்லா பஞ்சாபி குடும்பத்தில் இருந்து வந்ததால் எனது துணையும் சிறிது பொறுமையை பேணிக் காத்தல் வேண்டும் என்கிறார்.

முஹம்மது மாலிக் லண்டனை சேர்ந்தவராக இருந்துள்ளார்,ஆனால் இவர் பர்மிங்காமை தனது இரண்டாவது இல்லாமாக கருதி வருகிறார்.இதற்கான காரணங்களாக அவர் தெரிவிப்பதாவது நகர மையத்தில் உள்ள உயர்தர உணவு  வகைகள் துடிப்பான ஆலம் மற்றும் அற்புதமான மசூதிகளே என்றார்.

இந்த விளம்பர பலகையானது கோல்டன் ஹிலாக் ரோடு மற்றும் ஹாக்லி சர்க்கஸ் உட்பட நாடு முழுவதும் வைக்கப்படுள்ள விளம்பர பலகைகளில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.