டைனோசர் வேடத்தில் சென்று தடுப்பூசி செலுத்திய வாலிபர் ...வைரல் வீடியோ

மலேசியாவில் டைனோசர் ஒன்று  தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

டைனோசர் வேடத்தில் சென்று தடுப்பூசி செலுத்திய  வாலிபர் ...வைரல் வீடியோ

மலேசியாவில் டைனோசர் ஒன்று  தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்தியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

உலக முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலேசியாவை சேர்ந்த ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடிவு செய்து, வினோத முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டார்.

இதற்கென ஜூராஸிக் வேர்ல்டு படத்தில் இடம்பெற்ற கதாப்பாத்திரமான டைனோசர் போல் மேல்சூட் அணிந்து கொண்டு மையத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் டைனோசரே நேரில் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கிண்டல் செய்து வருகின்றனர்.