ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு டிரம்பே காரணம்: ஜோ பைடன் குற்றச்சாட்டு  

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முன்னாள் அதிபர் டிரம்பே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டியுள்ளார்.  

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு டிரம்பே காரணம்: ஜோ பைடன் குற்றச்சாட்டு   

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய விவகாரத்தில் குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப்,  ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு மிகவும் சரியானது என மனதார நம்புவதாகவும் இது அறிவுபூர்வமான முடிவு, அமெரிக்க நலன் காக்கும் முடிவு என்றும் பைடன் உருக்கமாக தெரிவித்தார்.

 ட்ரம்ப் அதிபராக இருந்த போது தலிபான்களுடன் போட்ட தவறான ஒப்பந்தமே தற்போதைய குழப்பங்களுக்கு காரணமாகி விட்டது என்றும் பைடன் குற்றச்சாட்டிய பைடன், ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் தலிபான்களை விடுவிக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் இதன் விளைவாகவே அவர்கள் வேகமாக எழுச்சி பெற முடிந்ததாகவும் பைடன் குறிப்பிட்டார்.