57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் பல சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபர் பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இத்தகைய பொருமைகளை கொண்டுள்ள கமலா ஹாரிஸ் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.