குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமல்ல..! உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு  தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமல்ல..! உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்...

அடுத்தடுத்து வீசிய கொரோனா அலைகளால், இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தொடர் முடக்கம் சிறுவர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பள்ளிகளை திறக்க நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சில மாநிலங்கள் பள்ளிகளை திறந்துள்ளன.

இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயமாக்க வேண்டாம் எனவும், மாணவர்களின் கற்றலுக்கு தடுப்பூசி தடையாக இருக்க கூடாது எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது பெரியோர்களுக்கு தான் தொற்று  பாதிப்பு அதிகம் என்பதால், அவர்கள்  தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என கூறியுள்ளது.