நெருப்பில் ஊருடுவி செல்லும் பயணிகள் ரயில்...வைரலாகும் வீடியோ!

நெருப்பில் ஊருடுவி செல்லும் பயணிகள் ரயில்...வைரலாகும் வீடியோ!

ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் பற்றி எரியும் காட்டித்தீயில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பல்வேறு நாடுகளில் காட்டூத் தீ:

ஐரோப்பா நாடுகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுக்கல், துருக்கி, கிரீஸ், ஸ்லோவேனியா, இத்தாலி  என பல்வேறு நாடுகளில் ஆங்காங்கு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

காட்டூத் தீயால் நேரிடும் உயிர்பலி:

இந்த காட்டூத் தீயால் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ள நிலையில், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளில் உயிர் பலி ஆயிரத்தை கடந்துள்ளது.  இதனால் பலர் நீர் நிலைகளை தேடியும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கியும் நகர்ந்து வருகின்றனர். 

தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறும் அரசு:

கடந்த பத்து நாட்களாக பல  ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் ஆகியவை பணியில் ஈடுபட்டிருந்தாலும் இதுவரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இதனையடுத்து தற்போது உறுப்பு நாடுகளுக்கு தீயணைப்பு வீரர்கள், உதவி உபகரணங்களை அனுப்பி வைத்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், நெருப்பை அணைக்க கூடுதல் விமானங்களை கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. 

இணையத்தில் வைரலாகும் வீடியோ:

இந்தநிலையில் ஸ்பெயினின் ஜமோரா மாகாணத்தில் நெருப்புக்குள் ஊடுறுவி பயணிகள் ரயில் ஒன்று செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் இருபுறமும் பற்றி எரியும் நெருப்பை மிரண்டு பார்த்தபடி பயணிகள் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து, பயணிகள் செல்லும் இரயில் நிறுவனமான ரென்ஃபே, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தீவிபத்து குறித்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் பகிர்ந்து வருகிறது.