என்னது.. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுதா.. அதுவும்.. அவர்களுக்கு தான் பாதிப்பு அதிகமா!!

சீனாவில் புதிதாக 588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னது.. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுதா..  அதுவும்.. அவர்களுக்கு தான் பாதிப்பு அதிகமா!!

உலகில் முதன்முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 555 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 112 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 476 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.