கென்யாவில் எலும்பும் தோலுமாக இறந்து காணப்படும் வனவிலங்குகள்!!

வறட்சி காரணமாக கென்யா உயிரியல் பூங்காவில் வாழும் வன விலங்குகள இறந்துள்ள புகைபடங்கள் வெளியாகி வருகிறது.

கென்யாவில் எலும்பும் தோலுமாக இறந்து காணப்படும் வனவிலங்குகள்!!

உயிரியல் பூங்காவில் இருந்த 6 ஓட்டகச் சிவிங்கிகள் வறட்சியால் இறந்துள்ளன. கென்யா பகுதியில் இந்த ஆண்டு மழை பெய்யாததால் வனப்பகுதிகளில் அதிக அளவில் வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வறட்சியினால் பூங்காவில் தண்ணீர் இல்லாமல் 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்து கிடக்கின்றன. இவைகள் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக உள்ளது. இந்த ஆறும் நீரை தேடி அழைந்ததில் நீர் கிடைக்காத பட்சத்தில் வெயிலின் தன்மையை தாங்க முடியாமல் ஒரே இடத்தில் விழுந்து இறந்துள்ளன.

அங்கிருந்த அணை ஒன்றில் தண்ணீரை தேடி சென்றதில், அந்த அணையும் வறட்சியினால் வறண்டு காணப்பட்டது. சோர்வில் வந்த இந்த 6 ஒட்டசிவிங்கிகளும் சேற்றில் சிக்கி இறந்துள்ளன.

இதுகுறித்து அல்ஜசீரா கூறுகையில் வட கென்யாவில் கடந்த செப்டம்பர் மாதம் மழைபொழிவு 30 சதவீதமாக குறைந்தது.இதன் காரணமாக தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுபாடு நிலவி வருவதாக தெரிவித்தார்.

வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் உயிரினங்கள் பாதுகாப்பாக இருந்து வருவதாக தெரிவித்த அவர் காட்டு விலங்குகளுக்கு தான் உரிய உணவு தண்ணீர் இல்லாமல் இறந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால் காரிஸா நாட்டில் உள்ள 4000 திற்கும் மேற்பட்ட ஒட்டகச் சிவிங்கிகள் வறட்சியால் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன என தெரியப்படுத்தி உள்ளனர் .இந்த வறட்சியினால் விலங்குகள் தொடர்ந்து தற்போது மக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.