ட்விட்டர் தலைமையிலிருந்து விலகுவாரா எலோன் மஸ்க்? மக்கள் கருத்துக்கு கட்டுப்படுவாரா?

ட்விட்டர் தலைமையிலிருந்து விலகுவாரா எலோன் மஸ்க்? மக்கள் கருத்துக்கு கட்டுப்படுவாரா?

எலோன் மஸ்க் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தி பயனர்களிடம் கருத்து கேட்டுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்துள்ளார் எலோன் மஸ்க்

கருத்து கணிப்பு:

ட்விட்டரில் முக்கிய கொள்கை மாற்றங்கள் காரணமாக எலோன் மஸ்க் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் அவர் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். எனினும், இந்த முடிவு குறித்து ட்விட்டர் பயனாளர்களிடம் கருத்து கேட்டுள்ளார் எலோன் மஸ்க். 

விலக வேண்டுமா?:

அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? எனவும் இந்த கருத்து கணிப்பு முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  இது தொடர்பாக ட்விட்டர் கருத்துக்கணிப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.  

மக்கள் கருத்து என்ன?:

இந்த கருத்து கணிப்பில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ட்வீட் செய்துள்ளனர்.  இந்த செய்தியை எழுதும் நேரத்தில், மஸ்க்கின் ட்விட்டர் கருத்துக்கணிப்பு முடிவடைய சுமார் இன்னும் 6 மணிநேரம் உள்ளது. அவரது கருத்துக்கணிப்பில் இதுவரை 11,444,840 பேர் வாக்களித்துள்ளனர்.  இதில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஏறக்குறைய 57 சதவீதம் பேர் விரும்பினாலும், 43 சதவீதம் பேர் இதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கேசிஆர் நடத்துவது சர்வாதிகார ஆட்சியா?  காங்கிரசின் குற்றச்சாட்டு என்ன?