ரூ.3.20 கோடி பண மோசடி செய்த மத்திய அரசு அதிகாரியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை..!

ரூ.3.20 கோடி பண மோசடி செய்த மத்திய அரசு  அதிகாரியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை..!

கொரோனா உபகரணங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாக கூறி மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த மத்திய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அதிகாரியான வி.கே ராஜன் என்பவர்,  மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை கண்ணன் அளித்தார்.

இந்த புகாரில் கே. வி.என் ராஜன் என்பவர் கொரோனா உபகரணங்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக தன்னை ஏமாற்றியதாகவும், இதனால், ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த ராஜனை தேடி வந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த ராஜனை மத்தியகுற்றப்பிரிவு தனிப்படை போலீசார் உத வி ஆணையர் ராஜசேகர் தலைமையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.