இலங்கையிலிருந்து புறப்பட்ட்து சீன ஆய்வுக் கப்பல்!

இலங்கையிலிருந்து புறப்பட்ட்து சீன ஆய்வுக் கப்பல்!

சீன விண்வெளி ஆய்வுக் கப்பல் யுவான் வாங்-5 கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால்  இந்திய அரசு கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வுக்கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆய்வுக்  கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வந்தன.எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் ஆய்வுக் கப்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இன்று புறப்பட்டது.

சீன ஆய்வுக் கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.