இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

இம்ரான் கான் கைது செய்யப்படுவார் என்ற நிலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

கடந்த வார இறுதியில் ஒரு உரையின் போது, ​​காவல்துறை அதிகாரிகளையும், பெண் நீதிபதியையும் மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், செப்டம்பர் 1 ஆம் தேதி வரை திரு. கான் கைது செய்யப்படுவதிலிருந்து இந்த முடிவு திறம்பட பாதுகாக்கிறது.

நீதிபதி-காவல்துறையினரை விமர்சித்த இம்ரான் கான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த மாபெரும் பேரணியில் காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரியை முன்னாள் பிரதமர் தாக்கிப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் காவல்துறை இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டில் அரசியல் பதற்றங்களை அதிகரித்து அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சைப் பரப்பியதாகக் கூறி இம்ரான் கானின் பேச்சுகளுக்கு நாட்டின் உயர்மட்ட ஊடக ஒழுங்குமுறை அமைப்பு தடை விதித்திருந்தது.. இந்த தடை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு காவல்துறை இவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

மேலும் படிக்க : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் கான் கைதாகிறாரா?

இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணை

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது நடவடிக்கைக்கான தடையை இந்த மாத இறுதி வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் நீதிமன்றம் ஆகஸ்ட் 25 அன்று தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவு, காவல்துறைக்கும் முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் குறித்த பதற்றத்தை தற்காலிகமாகத் தணிக்கிறது. கடந்த  ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து  இம்ரான் கான் வெகுசனப் பேரணிகளுக்கு தலைமை தாங்கி அழுத்தம் கொடுப்பதன் வழியாக முன்கூட்டியே தேர்தலை நடத்த முயன்று வருகிறார். அடுத்த ஆண்டு திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என்று அரசு கூறியுள்ளது.

பெருகி வரும் ஆதரவை கண்டு அச்சம்

ஆகஸ்ட் 25 அன்று பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்திற்கு வெளியே இம்ரான் கான் செய்தியாளர்களிடம் தான் யாரையும் அச்சுறுத்தவில்லை என்று கூறினார். அவர் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் இம்ரான் கானுக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டு அஞ்சுவதாகவும் கூறினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்குரைஞர் பாபர் அவான், இம்ரன் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பழிவாங்கும் செயல் என்றார். நீதிமன்றத்திற்கு வந்ததும், அவரது வாகனம் வாயிலிலேயே நிறுத்தப்பட்டது, மேலும் மிக முக்கிய நபர்கள் செல்வது போல வளாகத்திற்குள் காரில் செல்வதை விட சாதாரண நபர்கள் செல்வது போல வளாகத்திற்குள் நடந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஆயிரக்கணக்கான இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே கூடி, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் மற்றும் இம்ரான் கான் அரசியல் ரீதியாக பலிகடா ஆக்கப்படுகிறார் என்று கூறினர்.

வழக்கு குறித்து சட்ட வல்லுனர்கள்

ஏப்ரல் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பல மாதங்கள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை. இம்ரான் கான் வேறு இரண்டு வழக்குகளையும் எதிர்கொள்கிறார்.

ஆகஸ்ட் 25 அன்று, அவர் மற்றொரு நீதிமன்றத்திலும் ஆஜரானார். அங்கு தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேரணிகளை நடத்துவதற்கான தடையை மீறிய குற்றச்சாட்டில் இந்த வாரம் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 7ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.