பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் ... பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

சமூக இடைவெளி விதிமுறையை மீறிய விவகாரம் தொடர்பாக,  தனது பதவியை ராஜினாமா செய்வதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் தெரிவித்துள்ளார்.

பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த விவகாரம் ... பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தநிலையில், அவர் தனது பதவியை  ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.