ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: 

ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: 

இந்தோனேசியா குடியரசின் வெளியுறவு அமைச்சகம் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டை தலைநகர் பாலியில் ஜூலை 7,8 தேதிகளில்  நடத்தியது.  இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்
சமகாலத் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உட்பட தற்போதைய உலகளாவிய சவால்கள் குற்த்தும் பேசியதாக தெரிய வருகிறது.

உலகளாவிய சுகாதார கட்டமைப்பு:

உலக மீட்சிக்கான பாதைக்கு உலகளாவிய சுகாதாரத் தரங்களின் சமத்துவத்தை உறுதிசெய்யும் வலுவான கூட்டு ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால தொற்றுநோய்க்கு உலகளாவிய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய நெருக்கமான ஒத்துழைப்பை உறுதிப்படுத்து வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தொற்றுநோயின்  தாக்கம் காரணமாக உலகளாவிய சமூகம் ஒன்றாக கைகோர்த்து உத்வேகத்துடன் செயல்பட தொடங்க வேண்டும் எனவும்,  உலகளாவிய சுகாதார பின்னடைவை வலுப்படுத்த உலக நாடுகளை ஊக்கப்படுத்த வலியுறுத்த வேண்டும் எனவும் உலகளாவிய சுகாதார அமைப்பு சமத்துவமாகவும், நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய்க்கான தயார்நிலையை பூர்த்தி செய்தல் மற்றும் கோவிட்-19க்கு பிந்தைய உருமாறும் வைரஸ்க்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பல்வேறு கூட்டங்கள் மூலம் விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மாற்றம்:

உலகப் பொருளாதாரத்தின் விரைவான டிஜிட்டல் மயமாக்கலில் இருந்து உண்மையான சாத்தியங்களை அடைவதற்கு, டிஜிட்டல் யுகத்தில் பொதுவான செழிப்பைப் பெறுவதற்கு நாடுகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையேயும் ஒத்துழைப்பின் புதிய பங்களிப்பு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகப் பொருளாதார ஒழுங்கை வலுவாக உள்ளடக்கியதாக டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துவதன் மூலம்  மனித குலத்தின் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியும் எனவும் டிஜிட்டல் மயமாக்கல் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.   டிஜிட்டல் மாற்றத்தை  உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவது உலகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதுக் காட்டுவதாக உள்ளது.

நிலையான ஆற்றல் மாற்றம்:

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சியை நாம் தொடரும்போது தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கான  புதிய அணுகுமுறைகள் தேவை எனவும் புதிய பரிமாணங்கள் கவனிக்கப்பட வேண்டும் எனவும் இது உலகளாவிய சமூகத்திற்கு தூய்மையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் எனவும் கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்  உள்ளூர் மற்றும் உலகளாவிய வளர்ச்சியை பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆற்றல் மாற்றத்திற்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது எனவும் ஜி 20 உறுப்பு நாடுகள் ஆற்றல் நிலைத்தன்மைக்கு உகந்ததாக இயங்குவதை உறுதி செய்வதிலும் முதலீட்டுக்கான தளத்தை வழங்குவதிலும் பெரும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளபோவதாக அறிவித்துள்ளன.

ஆற்றல் அணுகலைப் பாதுகாப்பது, சுத்தமான ஆற்றல் தொழில்நுட்பத்தை அதிகரிப்பது மற்றும் ஆற்றல் நிதியளிப்பை ஊக்குவித்தல் போன்ற வடிவங்களில் சுற்றுச்சூழல் ஆற்றலைப் பற்றிய உரையாடல்கள் ஆற்றல் மாற்றங்களுக்கான பணிக்குழு மற்றும் சுற்றுச்சூழல் பிரதிநிதிகள் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு போன்ற பல்வேறு நிலைகளில் விவாதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

17வது ஜி-20 உச்சிமாநாடு:

17வது ஜி-20 நாடுகள் தலைவர்களின்  உச்சிமாநாடு இந்தோனேசியாவின் பாலியில் 15-16 நவம்பர் 2022 இல் நடைத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பில் இந்தோனேசியாவின் தலைமை டிசம்பர் 1, 2021 அன்று தொடங்கியது, . இத்தாலி ரோமில் நடைபெற்ற16வது ஜி-20 உச்சிமாநாட்டின் முடிவில் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியிடம் இருந்து இந்தோனேசியஅதிபர் ஜோகோ விடோடோவுக்கு தலைமை பொறுப்பு மாற்றி தரப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

18வது ஜி-20 உச்சி மாநாடு:

இந்தியா டிசம்பர் 1, 2022 அன்று இந்தோனேசியாவிடமிருந்து ஜி-20 அமைப்பின்  தலைமைப் பதவியை ஏற்கும் எனவும்மேலும் 2023 இல் இந்தியாவில் முதல் முறையாக ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டைக் கூட்டவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜி-20 அமைப்பு பின்னணி: 

1990 களின் பிற்பகுதியில் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாக்கிய நிதி நெருக்கடியின் பின்னணியில் 1999 இல் G20 உருவாக்கப்பட்டது. முதல் G20 உச்சி மாநாடு 2008 இல் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடைபெற்றது.

ஜி-20 அமைப்பு:

ஜி-20 என்பது ஒரு உலகளாவிய அமைப்பகும். இது நடுத்தர வருமானம் உடைய நாடுகளின்  உலகளாவிய நிதி நிலைத்தன்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  ஆண்டுதோறும் இந்த அமைப்பிற்கான கூட்டம் உறுப்பு நாடுகளி நடத்தப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஏற்கும்  நாட்டின் தலைவர்  உறுப்பினரல்லாத நாடுகளின் தலைவர்களை விருந்தினராக அழைக்கிறார்.

ஜி-20 அமைப்பின் உறுப்பினர்கள்: 

ஜி-20-ன் முழு உறுப்பு நாடுகள்- அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

ஜி-20 தலைமைச்செயலகம்: 

ஜி-20க்கு பிற அமைப்புகளை போல நிரந்தர செயலகம் இல்லை.