ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது-நரேந்திர மோடி!

ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது-நரேந்திர மோடி!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றதை நினைவுகூர்ந்த மோடி, அந்த நேரத்தில் இந்தியா தனது "கிழக்கை நோக்கிய செயல்பாடு" கொள்கையை அறிவித்ததாகவும், அதன் விளைவாக, பல்வேறு துறைகளில் ரஷ்ய உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

இந்தியா ரஷ்யாவுடனான தனது உறவை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது, மேலும் எரிசக்தி துறையிலும் ஒத்துழைப்புக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றுள்ள கிழக்குப் பொருளாதார மன்றத்தின் இணையவழியிலான முழு அமர்வில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார். உக்ரைனுடனான மோதல் மற்றும் அந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து அமைதியான முயற்சிகளையும் தாம் ஆதரிப்பதாக கூறினார்.

கிழக்கை நோக்கிய செயல் எனும் இந்தக் கொள்கை இப்போது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான  கூட்டுறவின் முக்கிய தூணாக மாறியுள்ளது, என்று அவர் கூறினார். இந்த மாதத்தோடு, விளாடிவோஸ்டாக்கில் இந்திய துணைத் தூதரகம் நிறுவப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நகரத்தில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா. அப்போதிருந்தே இந்த நகரம் எங்கள் உறவிற்கு சாட்சியாக உள்ளது என்று நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

கிழக்குப் பொருளாதார மன்றத்தை நிறுவியதற்காக புடினை வாழ்த்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறினார்.