உலக நாடுகள் பிரார்த்தனை:

உலக நாடுகள் பிரார்த்தனை:

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா:

இந்த கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள நாடு முயற்சிக்கிறது.  சூழலைக் கையாள அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் மேலும் இது மன்னிக்கக்கூடிய செயல் அல்ல என்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார்.

உலக நாடுகள் பிரார்த்தனை:

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை சுடப்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த துன்பியல் சம்பவத்திற்கு உலகின் பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.  


ஐ.நா. பொதுச்செயலாளர் பிளிங்கன் வருத்தம்:


ஷின்சோ அபே சுடப்பட்டது மிகவும் சோகமான தருணம் எனவும் அவருக்காக பிரார்த்தனைகள் செய்வதாகவும் ஜப்பானில் இருந்து வரும் செய்திக்காக காத்திருப்பதாகவும் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த ஜி-20 கூட்டத்தில் ஐ.நா. செயலாளர் பிளிங்கன் தெரிவித்துள்ளார். 


உலக தலைவர்கள் பிரார்த்தனை செய்தி: 


அனைவரும் ஷின்சோவுக்காக பிரார்த்தனை செய்வதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் இந்த நேரத்தில் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்.

அபே ஆஸ்திரேலியாவின் சிறந்த நண்பர் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தின் மிக முக்கியமான உலகளாவிய தலைவர்களில் ஒருவர். இந்த கடினமான நேரத்தில் எங்கள் பிரார்த்தனைகள் அவருடனும், அவரது மனைவி மற்றும் ஜப்பான் மக்களுடன் உள்ளன என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மோரிசன் ட்விட்டரில் எழுதியுள்ளார்.

அன்பு நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த மனவேதனை அடைவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  ட்விட்டரில் எழுதினார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் ஜப்பான் மக்களுடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆழ்ந்த அதிர்ச்சிஅடைந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.  மேலும் அவர் கூறுகையில் தான் பிரதமரானபோது சந்தித்த முதல் தலைவர்களில் அவரும் ஒருவர். ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் எனவும் தாராள மனப்பான்மையுடனும் அன்பாகவும் இருந்தார் எனவும் பதிவிட்டுள்ளார்.