அமெரிக்காவில் அசத்தி வரும் இந்தியர்... ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்...

இலினொய் தொழில்நுட்ப  பல்கலைக்கழக தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனமிக்கப்பட்டுள்ளார்.  

அமெரிக்காவில் அசத்தி வரும் இந்தியர்... ராஜகோபால் ஈச்சம்பாடி எனும் நான்...

இலினொய் தொழில்நுட்ப  பல்கலைக்கழக தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள 131 வருட பழமையானதும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமுமான இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி. 53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தவர் ராஜகோபால். இலினொய் பல்கலைக்கழக 10-வது தலைவராக வரும் ஆகஸ்ட் 16-ல் பொறுப்பேற்கிறார் ராஜகோபால் ஈச்சம்பாடி. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.