2023 சீன வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள்... விஸ்வரூபம் எடுக்கும் எல்லை பிரச்சனை!!

2023 சீன வரைபடத்தில் இந்தியாவின் பகுதிகள்... விஸ்வரூபம் எடுக்கும் எல்லை பிரச்சனை!!

2023 சீன வரைபடம் என பெயரிடப்பட்ட இந்த வரைபடத்தை சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலப்பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாசலப்பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் எனக் குறிப்பிடுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியமைத்த நிலையில், புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. 

அதன்படி அருணாசலப்பிரதேசம் மற்றும் அக்சாய் சென் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அருணாசலப்பிரதேசத்தை தெற்கு திபெத் என வரைபடத்தில் சீனா குறிப்பிட்டுள்ளது. சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக இருக்கும் தைவானையும் தென்சீனக் கடலின் பெரும்பகுதியான சர்ச்சைக்குரிய Nine dash line எல்லைக் கோடையும் சீனா சொந்தம் கொண்டாடுவதாக சர்வதேச அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அருணாசலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதால் இத்தகைய முயற்சிகள் உண்மையை மாற்றாது என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் சாலை அமைப்பது, கட்டிடம் கட்டுவது, பாலம் கட்ட முயற்சிப்பது என சீனா பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களும் மோதியதில் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை அதிகரித்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மறுபுறம் உத்தவ்தாக்கரே சிவசேனா அணியின் ஆதரவாளரான சஞ்சய் ராவத் எம். பி குறிப்பிடுகையில் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா என கேள்வியெழுப்பியுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிகாரிகளை கட்டிப்பிடித்து பிரதமர் வரவேற்ற நிலையில், இவ்வரைபடம் வெளியாகி இருப்பது ஆச்சரியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க || Carding Process-ல் 1,00,000ரூ ஐபோன் 4000ரூ... ஆபத்தை உணரலாம் வாங்க!!