விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் ஆர்ப்பாட்டம்!!

விலைவாசி உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் ஆர்ப்பாட்டம்!!

விலைவாசி உயா்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் வரும் 23-ம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக மாநில தலைவா் அண்ணாமலை தொிவித்துள்ளாா். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தமிழக காமராஜர் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், பிரதமர் மோடிக்கு எதிரான கூட்டணி மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்காது என தொிவித்த அவா், பெங்களூரில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து யாரும் அறிய விரும்பவில்லை எனவும் தொிவித்தாா். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் இருக்கும்போது, தமிழ்நாட்டு தண்ணீர் தர மாட்டோம் என்று கூற முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டினாா்.

மேலும் பேசிய அவர், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது வருத்தமடைய செய்வதாகவும், எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், அங்கு இது தொடா்பாக கண்டன குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை அவா் கண்டிக்காமல் திரும்பினால் அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் பாஜக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காய்கறி, மின்சாரம், பத்திரப் பதிவு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 600 கிராம ஊராட்சிகளில், வரும் 23-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினாா்.

இதையும் படிக்க || " திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகிறார்கள்" - செல்லூர் ராஜூ.