கடல் -ல தான பேனா சிலை வைக்கக்கூடாது...? கட்டுன வீட்டுல வைக்கலாம்ல...?

கடல் -ல தான பேனா சிலை வைக்கக்கூடாது...?  கட்டுன வீட்டுல வைக்கலாம்ல...?

கலைஞர் கருணாநிதியின் கலை சாதனைகளையும் ஆட்சியின் சாதனைகளையும் மரியாதை செய்யும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் பேனாவின் சிலை நிறுவ இருப்பதாக திமுக சார்பில் திட்டங்கள் செய்யப்பட்டன . இதனை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், 
மதுரையில் தான் கட்டிய புதிய வீட்டில் பேனாவை நிறுவிய திமுக தொண்டரரின் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். திமுகவில் 37 ஆண்டுகளாக இருந்து வரும் தீவிர திமுக விசுவாசியான இவர்,  தான் கட்டிய புதிய இல்லத்தில் கலைஞரின் பேனா சின்னத்தை நிறுவியுள்ளார். இவர் தனது வீட்டின் முன்புறமும் மொட்டை மாடியிலும் பேனா சிலைகளை வைத்துள்ளார்.  

சுமார் 5 அடி உயரத்தில் 2 பேனா சிலைகளை  நிறுவியுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
கலைஞரின் புகழை மறைக்க முடியாது என்றும், ஒவ்வொரு தொண்டனின் வீட்டிலும் கலைஞரின் பேனா உதிக்கும் எனவும்  தெரிவித்துள்ளார். அவரது வீட்டிற்கு வருபவர்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். 

இதையும் படிக்க    } 12 மணி நேர வேலை சட்ட மசோதா... ! திரும்பப் பெறுமா? ஆளுநருக்கு அனுப்புமா?

திமுக தொண்டரின் இந்த வித்யாசமான முயற்சி அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக திமுக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளது.

இடையும் படிக்க   } 12 மணி நேர வேலை சட்டம்...!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்...!!