கடும் கோடை மழையால்...... வாழை மரங்கள் சேதம்....கண்ணீரால் கோரிக்கை வைக்கும் விவசாயி...!

கடும்  கோடை மழையால்...... வாழை மரங்கள் சேதம்....கண்ணீரால் கோரிக்கை வைக்கும் விவசாயி...!

கடந்த சில மாதங்களாகவே பகல் நேரங்களில் கடுமையான வெயில் காணப்பட்டு வந்தது இந்நிலையில் சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்று வீசியது. இந்நிலையில், கீழ்கணவாய் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தது.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. கருமந்துறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சுமார்  2 ஆயிரத்து 500 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. 

இந்நிலையில், கீரிப்பட்டி, கீழ்கணவாய் மற்றும் சுற்றுப்புற வட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்று வீசியது தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால் பலத்த காற்றால் பகுடுபட்டு ஊராட்சி கைக்கான் வளவு பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவர் தனது தோட்டத்தில் சுமார் 2500 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஒரு ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த செவ்வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து சுமார்  4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் சேதம் அடைந்தது. இதனைக்  கண்டு கண்ணீருடன் விவசாயி தமிழக முதல்வரிடம் நஷ்ட ஈடு கேட்டு கருணை கோரிக்கை வைத்துள்ளார்.  

இதையும் படிக்க   } 12 மணி நேர சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மே 12 இல் வேலை நிறுத்தம்

இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் முழுமையான கணக்கெடுப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க  வேளாண் துறை அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளாதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க   } அரியலூரில் புத்தகத் திருவிழா இன்று முதல் ஆரம்பம்....!