கரையை கடந்த அதி தீவிர மோக்கா புயல்...!!!

கரையை கடந்த அதி தீவிர மோக்கா புயல்...!!!

வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேசத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் அதி தீவிர மோக்கா புயல் கரையை கடந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவான மோக்கா புயல், வியாழக்கிழமை அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. பின்னர், போர்ட் பிளேயரில் இருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அப்போது, 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்க தேச கடற்கரை பகுதியில் மிக அதிதீவிர புயலாக கரையை கடந்தது.மோக்கா புயல் கரையை கடந்தபோது சுமார் 210 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.  முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக வங்கதேசம் மற்றும் மியான்மரில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

மியான்மரின் மேற்கு ரக்கைன் கடற்கரையில் உள்ள சிட்வேயில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல், காக்ஸ் பஜார் மற்றும் சிட்டகாங் பகுதிகளில் இருந்த சுமார் 3 லட்சம் பேர், 4 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க:  போதையில் தள்ளாடும் தமிழ்நாடு... சிவி.சண்முகம்!!