தங்கப்பேனா நேரில் தருகிறேன்: 600/600 பெற்ற மாணவிக்கு கவிபேரரசு வாழ்த்து!!!

தங்கப்பேனா நேரில் தருகிறேன்: 600/600 பெற்ற மாணவிக்கு கவிபேரரசு வாழ்த்து!!!

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது.

600/600 சூப்பர் நந்தினி! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த "கூடை!" திறந்து  பார்த்தால்.. "ஸ்வீட் சர்ப்ரைஸ்" | Stalin congratulated the student Nandhini  who scored +2 topper by gifting ...

இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். மேலும் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் என மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | எனக்கு நிதி அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்

இந்த சூழலில் 6 பாடங்களிலும் 100-க்கு 100 என்று 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கலில் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என்று குறிப்பிட்டுள்ளார்.