"ரேஷனில் பிளாஸ்டிக் அரிசியா?"  மக்கள் பீதி!

"ரேஷனில் பிளாஸ்டிக் அரிசியா?"  மக்கள் பீதி!

ரேஷன் கடையில் வழங்கிய அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தில் ரேசன் கடையில் பொது மக்களுக்கு இந்த மாதத்திற்கான அரிசி விநியோகம் செய்யப்பட்டது. அந்த அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக தகவல் பரவியதால் பொது மக்களிடையே அச்சம் அடைந்துள்ளனர். 

கடந்த நான்கு மாதங்களாக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் நீளமான வெள்ளை நிற அரிசி கலக்கப்படுவதாவும் அந்த அரிசியை தண்ணீரில் ஊர வைக்கும் போது மிதந்து மேலே வருவதாகவும் அந்த அரிசி சமைக்காமலேயே சாதம் போன்று காணப்படுவதால் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தகவல் பரவியது. இதனால் ஆலம்பாடி கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகின்றதா என்பது குறித்தும் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்களின் அச்சத்தை போக்க  அதிகாரிகள் முறையான விழிப்புணர்வு செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:பல் பிடுங்கிய விவகாரம் "24 போலீசார் பணியிட மாற்றம்"!