உங்கள் சாயம் வெளுத்துவிட்டது.. இனி மக்கள் உங்களை நம்ப மாட்டாங்க!! நிதியமைச்சரை தாறுமாறாக கிழிக்கும் அன்புமணி
திமுகவை இனி மக்கள் இனி உங்களை நம்ப மாட்டார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ரயில்கள் நின்று செல்லக்கோரி கடைகளை அடைத்து முழு பந்த், மற்றும் ரயில் மறியல் போராட்டம்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரி 30 ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்தும் கண்டுகொள்ளாத தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நகர் பொது மக்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் இன்று கடைகளை அடைத்து பந்த் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஆதரவை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகராக சிவகங்கை உருவாகி 38 ஆண்டுகளை கடந்த நிலையில் நகரின் வளர்ச்சி என்பது இன்றளவும் கேள்விக்குரியாகவே உள்ளது. மேலும் சிவகங்கை வழியாக ஏராளமான பயனிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில் ஒரு சில ரயில் தவிர மற்ற ரயில்கள் நின்று செல்வதில்லை. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் அன்மையில் இயக்கப்பட்டுவரும் பல்லவன் ரயிலும் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சிவகங்கையை கடந்து செல்லும் அனைத்து ரயிகளையும் நிறுத்த கோரி பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் பலமுறை கோரிக்கைவிடுத்தும் இதுவரை தெற்கு ரயில்வே கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் சிவகங்கை நகர் பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் சிவகங்கை நலக்குழு என்கிற குழுவை உருவாக்கி அதன் கீழ் அனைவரும் ஒன்றுபட செய்து அதன் ஒருங்கினைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் நியமிக்கப்பட்டு அவரின் தலைமையில் இன்று கடைகளை அடைத்து முழு பந்த் மற்றும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அரசின் தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று அறிவிக்கப்பட்டதுபோல் அனைத்து போராட்டமும் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக சிவகங்கை நகர் முழுவதுமுள்ள அனைத்து கடைகளையும் அடைத்து வர்த்தகர்கள் தங்களது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். இதன் காரணமாக நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை தொடர்ந்து சிவகங்கை ரயில் நிலையத்தில் பொது மக்கள், அனைத்து கட்சியினர், வர்த்தகர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது. இதே இடஒதுக்கீட்டிற்குள் எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஆங்கிலோ - இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீடும் முன்மொழியப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு 1989ம் ஆண்டு மே மாதம் முதல்முறையாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநிலங்களைவையில் தோல்வி அடைந்தது.
1996ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டு வரப்பட்டபோதும், மக்களவையில் தோல்வியடைந்தது. தொடர்ந்து 1998, 1999, 2000, 2003ம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த மசோதாக்களும் நிறைவேறவில்லை.
2008ம் ஆண்டு மன்மோகன்சிங் அரசால் மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 2009ம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010ம் ஆண்டு மத்திய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
2010ம் ஆண்டு மாநிலங்களவையில் 186க்கு ஒன்று என்ற வாக்குகளின் அடிப்படையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டும் மக்களவையில் மசோதா எடுத்துக் கொள்ளப்படவில்லை. 13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இம்மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தின் 10வது ஆண்டில் மசோதாவுக்கான ஆரவாரம் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கையில், அரசியல் காரணங்களுக்காக புதைத்து வைத்திருந்த மசோதாவை தற்போது பாஜக மீண்டும் உயிர்பிக்க முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறாக 1999ம் ஆண்டில் இருந்தே பேசப்பட்டு வந்தபோதும், பெரும்பாலான தலைவர்கள் இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆரம்பத்தில் இருந்தே உறுதியான நிலைபாடு எடுத்து வராத தற்போதைய பாஜக அரசு, மக்களவைத் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: நியோ மேக்ஸ் மோசடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு!
பகுத்தறிவு கருத்துக்களின் மூலம் சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை விளைவித்த தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் இன்று. சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் இந்த இனிய நாளில் தந்தை பெரியாரை நினைவு கூறுவோம்.
யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், ஏன்.. நானே சொன்னாலும் உன் புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.. பெரியாரின் பொன்மொழிகளில் ஒன்று இது.
யாரோ எழுதி வைத்த வேதங்களை, யாரோ கூறிய வேதாந்தங்களை எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றால் அது சரி.. ஆனால் இங்கு வேதங்களும் வேதாந்தங்களும் மனிதரிடையே பிரிவைத்தானே உண்டாக்குகின்றன? பின்னர் எதற்காக வேதாந்தம் வெங்காயம் என கேள்வி எழுப்பி சமத்துவத்தை போதித்த சமகால புத்தர்தான் பெரியார்.
மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என பெரியார் உதிர்த்த வார்த்தைகள் தற்போது வரை உண்மையாகி வருகின்றன. தன் கொள்கைகளின் மூலம் ஆண்டாண்டு காலம் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார்.
செழிப்பான குடும்பத்தில் பிறந்தபோதும் சமூகத்தில் நிலவுகிற ஒடுக்குமுறைகளை எதிர்த்து களம் கண்டார் பெரியார். பழமையான குடிகள் என்ற பெருமையைப் பெற்றபோதும், இதுநாள் வரை மேல் கீழ் என வரையறுக்கப்பட்டதே மன்னிக்க முடியாத பாவம் என பொங்கினார் பெரியார்.
முதுமையிலும் தள்ளாடியவாறு சாதிய இழிவில் இருந்து விடுதலை பெறாமல் சாகிறேனே என வெதும்பியவர். அரசியல் பதவிகள் அவரைத் தேடி வந்தபோதும் கிஞ்சித்தும் சபலம் கொள்ளாதவர் பெரியார். பெரியார் என்பவரை ஒற்றை மனிதர் என்ற வட்டத்துக்குள் அடைப்பதென்பது பெருங்கடலை பேனா குடுவைக்குள் அடைப்பது போலாகும்.
ஏனெனில் பெரியார் ஒற்றை மனிதர் அல்ல. கோடிக்கணக்கானோரின் வெளிப்பாடு. சமூகநீதியின் பிறப்பிடம். பெண் விடுதலையின் பெரும் குன்று. முற்போக்கு சிந்தனையின் மூத்த குலம். தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல்லி அறிமுகப்படுத்தியதோடு அரசியலின் புதிய அரிச்சுவடியை படைத்த பகுத்தறிவு பகலவனுக்கு இன்று 145-வது பிறந்தநாள்.
பெண்விடுதலை ஒன்றே பெரியாரின் பெருங்கனவு.. சாதியை சொல்லி அடக்க நினைப்பவன் மிரளும் போது, மதம் என்ற பெயரில் பிரிவினையை உண்டாக்க நினைக்க சிலர் அஞ்சும் போது, பெண்களை அடிமைப்படுத்த பித்தர்கள் சிலர் முடிவெடுத்தும் தயங்கும் போது அங்கு விஸ்வரூபமாய் காட்சியளிக்கிறார் பெரியார்.
இதையும் படிக்க: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; நிறைவேறத் தயாராகும் மசோதாக்கள்?
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18 தேதி முதல் கூடுகிறது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடர் 22ம் தேதி நிறைவடைகிறது. இதில் பல்வேறு மசோதாக்கல் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
வழக்கமாக கூட்டத்தொடரில்தான் சலசலப்புகளும் சர்ச்சைகளும் அரங்கேறும் ஆனால் சற்று வித்தியாசமாக சிறப்பு கூட்டத்தொடர் அறிவிப்பே சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டுப்படுவதற்கான எவ்வித காரணங்களையும் குறிப்பிடாமல் X வலைதளத்தில்தான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற கூட்டம் கூட்டப்பட்டால் 15 நாட்களுக்கு முன் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு கூட்டத்தொடர் நடைபெறுவதே வழக்கம் ஆனால் இந்த விவகாரத்தில் எவ்வித நடைமுறைகளையும் மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் மணிப்பூர் கலவரம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உள்ளிட்ட 9 விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றியே சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனஅமைச்சர் பிரகலாத் ஜோஷி சோனியாவுக்கு பதில் கடிதமும் அனுப்பி இருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் என்பது இதுநாள் வரை அதி முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே கூட்டப்பட்டது. 2017ம் ஆண்டு ஜூன் 30ம் நாள் ஜி.எஸ். டி குறித்த விவாதத்திற்கும், 1997 ம் ஆண்டு 50வது சுதந்திரத்தை கொண்டாடுவது குறித்தும் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த நிலையில் 18ம் தேதி கூட்டப்படும் சிறப்புக்கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் மசோதா, பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தலைமை தேர்தல் அதிகாரி நியமனம், உள்ளிட்ட மசோதாக்கள் கொண்டு வர இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு 1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகளின் 75ம் ஆண்டு குறித்த அனுபவங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு உறுதி செய்யப்படும் என்றும் தெரிய வருகிறது
கூட்டத்தொடரின் அறிவிப்பே காரசாரமாக இருந்ததால் 5 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடர் முழுவதும் அனல் பறக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட அரசியலின் தலைமகன் அனைத்து கட்சியினராலும் கொண்டாடப்படுகிறார் பேரறிஞர் அண்ணா.
1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்றார். பகுத்தறிவு பகலவன், சீர்த்திருத்தவாதி தந்தை பெரியாரின் சீடராக திகழ்ந்த அண்ணா, 1938-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவினார். கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. ஆனால் பெரியாரின் கரம் பிடித்து வளர்ந்த அண்ணாதுரையோ, பிள்ளையாருக்கு தேங்காயும் உடைப்பதில்லை, பிள்ளையார் சிலையையும் உடைப்பதில்லை என்ற கருத்தை கடைசி வரையிலும் கொண்டிருந்தார்.
இன்றைக்கு திராவிட மாடல் என்ற வார்த்தை மிகப்பெரிய சக்தியாக மாறி தமிழ்நாட்டின் இந்தியாவின் அரசில் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த மாற்றத்திற்கு ஆணி வேராய், திராவிட சித்தாந்தங்களின் தலைவனாய், திராவிட இயக்க அரசியலின் பிதாமகனாய் போற்றப்படுபவர் பேரறிஞர் அண்ணா.
1967-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா, மெட்ராஸ் என்றே அழைத்து வரப்பட்ட நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பெருந்தகையானார்.
சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தோடு, இந்தியை எதிர்த்து இருமொழிக் கொள்கையை ஆதரித்தார் பேரறிஞர் அண்ணா. டெல்லியில் இருந்து தென்தமிழகம் நோக்கி விரைந்த அரசியல் ஆக்கிரமிப்பினை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய பெருமையும் பேரறிஞர் அண்ணாவையேச் சேரும்.
அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்கள் மட்டுமல்லாது, அ.தி. மு.க. ம.தி. மு.க. பா.ம.க. என அனைத்து கட்சியினராலும் பேதமின்றி கொண்டாடப்படும் அரசியல் ஆசானாகவே திகழ்கிறார் பேரறிஞர் அண்ணா.
இதையும் படிக்க: குல தொழிலை எப்படி தொடர்ந்து பின்பற்ற முடியும்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி!