நீங்கதான் ராஜமாதாவா? இதுதான் ராஜதந்திரமா? கொத்து கொத்தா தூக்குறாரு ஸ்டாலின்!! சசி மீது பயங்கர கடுப்பில் எடப்பாடி.! 

நீங்கதான் ராஜமாதாவா? இதுதான் ராஜதந்திரமா? கொத்து கொத்தா தூக்குறாரு ஸ்டாலின்!! சசி மீது பயங்கர கடுப்பில் எடப்பாடி.! 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவிட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும் இனி சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைதியாக இருந்த அவர் தேர்தலை ஒட்டி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று அறிவித்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார்.

ஆரம்பத்தில் சசிகலாவிடம் பேசியவர்கள் அதிமுகவினரே அல்ல, அவர்கள் அனைவரும் அமமுகவினர் தான் என்று கே.பி.முனுசாமி மூலம் பேசவைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலர் வெளிப்படையாகவே சசிகலாவிடம் பேச வேறு வழியே இன்றி  ஒருகட்டத்தில் சசிகலாவோடு பேசிய அதிமுக தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கினர் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும். இப்படி சசிகலாவிடம் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கியதும் மற்றவர்கள் பயந்துகொண்டு சசிகலாவிடம் பேசமாட்டார்கள் என்று நினைத்தது அதிமுக தலைமை. 

ஆனால் ஜெயலலிதாவிடமே அரசியல் செய்த சசிகலா எடப்பாடி, பன்னீர்செல்வத்தை பார்த்தா அமைதியாயிருப்பார்? அதன்பின் வெளிப்படையாகவே அதிமுக பற்றியும் அதன் தலைமை பற்றியும் பேச ஆரம்பித்தார் சசிகலா. இதை எடப்பாடி எதிர்பார்க்கவேயில்லை. மேலும் சசிகலாவிற்கு எதிராக மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டாலும், பாதி மாவட்டங்களில் கூட இப்படி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் தூத்துக்குடியில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எடப்பாடியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதன்பின் சசிகலா பற்றி அதிமுக தலைமை பேசுவதே குறைந்து விட்டது. எடப்பாடி தரப்பு மட்டும் முணுமுணுக்க பன்னீர்செல்வம் தரப்பு முழுக்க முழுக்க அமைதியாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா முடிந்ததும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக சசிகலா கூறிவருகிறார். அப்படி நடந்தால் அது அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

இப்படி அதிரடி காட்டும் சசிகலாவிற்கு எதிராக ஏதும் செய்யாமல் அவரோடு பேசுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவது சரியா? என்ற விவாதம் அதிமுகவிற்குள்ளேயே எழுந்துள்ளது. சசிகலாவோடு பேசுபவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. தொண்டர்கள் தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் வரை அது நீண்டுகொண்டே செல்கிறது. அவர்கள் அனைவரையும் நீக்கினால் கட்சி என்னவாக போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இவர்கள் கட்சியில் பல ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் நீக்கத்தால் கட்சி பலவீனமாகி அது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று பேசப்படுகிறது. 

இது அனைத்திற்கும் மேல் அப்படி நீக்குபவர்கள் சசிகலாவோடு சேராமல் திமுகவில் இணைந்து வருகிறார்கள். திமுகவும் அப்படி வருபவர்களை இருகரம் விரித்து வரவேற்கிறது. இது எடப்பாடிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள். மேலும், சசிகலாவை பெரிய ராஜமாதா என்றார்கள். ஆனால் இப்படி கட்சி காரர்களை திமுகவிற்கு தாரை வார்த்து வருகிறார். இது தான் இவரின் ராஜதந்திரமா? என்று புலம்பி வருவதாக கூறுகிறார்கள்.