நண்பனின் முன் விரோதத்தால் அநியாயமாக அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

நண்பருடன் சென்றிருந்த வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நண்பனின் முன் விரோதத்தால் அநியாயமாக அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபர்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும்  தகவல்கள்..!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயராஜா. அதே பகுதியை சேர்ந்தவர் இவரது நண்பர் ஆனந்தபாபு. நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரையும் தொளார் கிராமத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியள்ளனர். இதில்  படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில்  கீழே விழுந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உதயராஜா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது நண்பர் ஆனந்தபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொளார் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பவல்லி என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. அப்போது தர்மராஜ் அந்த பெண்ணுக்கு 5 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனிடையே ஆனந்த் பாபுக்கும் புஷ்பவல்லிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு ஆனந்தபாபு அந்த பணத்தை தான் தருவதாக கூறியுள்ளார். இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தர்மராஜ் உட்பட 11 பேர் கொண்ட கும்பல் பெண்ணாடம் புதிய பேருந்து நிலையம் வருமாறு ஆனந்தபாபுவிடம் கூறியுள்ளனர். இதனால் ஆனந்தபாபு தனது நெருங்கிய நண்பரான உதய ராஜாவை அழைத்துக்கொண்டு சென்றபோது, திடீரென பதினோரு பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்துள்ள உருட்டுக்கட்டையால் ஆனந்த பாபுவை தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உதய ராஜா நண்பனை அடிக்க வேண்டாம் என கூறி தடுத்தபோது, நீ யார் எங்களை கேட்பதற்கு என கூறி கடுமையாக அவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த அடி வாங்குன உதயராஜா ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேர் கொண்ட கும்பலில், முக்கிய குற்றவாளியான 4 பேரை தவிர மற்ற 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தால் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் போலீசார் அதிகம் குவிந்துள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.