அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி...! ஒன்னில்ல ரெண்டில்ல..... 70 லட்சம் எஸ்கேப்பு...!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி...!  ஒன்னில்ல ரெண்டில்ல..... 70 லட்சம் எஸ்கேப்பு...!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபரின் வீட்டை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள வெள்ளபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் இந்திராகுமார் (45) .

இவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தனக்கு முக்கிய அமைச்சர்கள் தெரியும் எனக் கூறி சேலம்,ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பணம் பெற்றுக் கொண்ட இந்திரகுமார் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி,சரோஜா, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களிடம் பெயர்களை கூறி பேசி வருவதாகவும் அதற்கான அரசாணை பெற்று தருவதாக கூறி தொடர்ந்து 4 வருட காலமாக கால தாமதம் செய்து வந்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் குடும்பத்தினருடன் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் இந்திர குமாரின் வீட்டிற்கு சென்று பணம் கேட்க சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டில் இந்திரகுமார் இல்லாததால் வீட்டில் உள்ள குடும்பத்தினர் கேட்டை பூட்டிவிட்டு வெளியே வராமல் பாதிக்கப்பட்ட நபர்களை தகாத வார்த்தைகளால் வசைப்பாடி திட்டி உள்ளனர்.

பின்னர் நீண்ட நேரமாக பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில் காத்துக் கொண்டிருந்த நிலையில், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நபர்கள் குடும்பத்தினருடன் இந்திரகுமாரின்  வீட்டை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  வெண்ணந்தூர் போலீசார் முறையாக மோசடி செய்த நபரின் மீது புகார் அளிக்க வேண்டும் என கூறியதால் பாதிக்கப்பட்ட நபர்கள் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க அங்கிருந்து கலந்து சென்றனர்.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், தான் மகனுக்கு நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் வரை பணம் பெற்றதாகும்,  அதனை திருப்பி கேட்ட போது தொடர்ந்து தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார். மேலும் பணத்தை ஆன்லைன் மூலமும், இந்திரகுமாரிடம் நேரடியாக வழங்கியதாகவும் கூறினார்.

தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வழங்கப்பட்ட பணத்தை திருப்பி வழங்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 16 நபர்களிடம் மோசடி செய்த நபர் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் பணத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க    | "யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்ல வேண்டாம்" பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்!