உயிரையே விடுவேன்; குடியை விட மாட்டேன் : குடிப்பதை தடுத்ததால் 70 வயது முதியவர் செய்த காரியம்!!

திருச்செங்கோடு அருகே மது அருந்தக் கூடாது எனக் குடும்பத்தினர் கூறியதால் 70 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயிரையே விடுவேன்; குடியை விட மாட்டேன் : குடிப்பதை தடுத்ததால் 70 வயது முதியவர் செய்த காரியம்!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் தபால் நிலையம் அருகில் வசித்து வரும் 70 வயது முதியவர் சின்னுசாமி. இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் இளங்கோ, மோகன் என்ற மகன்கள் உள்ளனர். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பட்டறையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் கொரானோவால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த 3 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்த நிலையில்  மது அருந்தியதால் குடும்பத்தினர் திட்டி உள்ளனர். இதில் மனமுடைந்த சின்னுசாமி சீத்தாராம்பாளையம் பழனி ஆண்டவர் கோவில் தோட்டம் பகுதியில் முள் மரத்தில் நைலான் கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் சின்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் வந்த சின்னுசாமி மதுவுக்கு அடிமையாக வேண்டாம் என குடும்பத்தினர் கூறியும் மதுப் பழக்கத்தினால் மீண்டு வர முடியாத நிலையில் இருந்த சின்னுசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.