தொடர்கதையாகும் புள்ளிங்கோக்களின், படிக்கட்டு சாகச பயணம்!

தொடர்கதையாகும் புள்ளிங்கோக்களின், படிக்கட்டு சாகச பயணம்!

எண்ணூரில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சாகச பயணம் மேற்கொண்ட இளைஞர்களின் வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நமது ஊரில் பெரும்பாலும், மக்கள் பேருந்தையே உபயோகப்படுத்துகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் ஏராளமான காரணங்களுக்காக ஏராளமான மக்கள் பேருந்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், கூட்டம் நெரிசல் காரணமாக, பேருந்தின் படிக்கட்டில் பயணிப்பவர்களை கண்டிருப்போம். ஆனால், தற்போதுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், அதற்கும் ஒரு படி கீழ் பொய், பேருந்தில் தொங்கியபடி, தரையில் கால்களை தேய்த்துக்கொண்டு சாகசம் செய்துகொண்டே பயணிக்கிறார்கள். இந்த சாகச செயல்கள் தற்போது அல்ல, சில காலங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இதனால் சில சமயங்களில் கீழே விழுந்து மரணித்தவர்களும் உண்டு.

அந்த வகையில், வடசென்னை எண்ணூரில் மாநகர பேருந்தின் படிகட்டில் தொங்கியவாறு சாகசம் செய்த இளைஞர்களின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர்  வழித்தடம் வரை செல்லக்கூடிய  56a என்ற மாநகர பேருந்தில் பயணம் செய்த புள்ளிங்கோ இளைஞர்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு, சாலையில் தங்கள் கால்களை தேய்த்தபடி ஸ்கேடிங் செய்துள்ளனர். ஏதோ அரிய சாதனைக்குரிய நிகழ்வை செய்வது போல படிகட்டில் தொங்கி சென்ற இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில், இவ்வாறு, சேட்டை செய்யும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மேல் அக்கறை கொண்ட , பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகள், இது தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திலோ, அல்லது எண் 100க்கோ போனில் தொடர்புக் கொண்டு, பேருந்து எண், வழித்தடம் போன்ற விவரங்களை கூறினால், உடனடியாக காவலர்கள் அவ்விடம் வந்து மாணவர்களுக்கு தக்க படம் புகட்டப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை செய்தால், இனி வரும் காலங்களில், மாணவர்களின் சாகச செயல்கள் குறைய வாய்ப்புண்டு.

இதையும் படிக்க || ஒடிசா ரயில் விபத்து: தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் பதவி நீக்கம்!