போராட்டம் செய்த 50 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் 50பேர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போராட்டம் செய்த 50 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...

திருவள்ளூர் | பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் எல்லை தகராறு தொடர்பாக கடந்த 7ஆம் தேதி கூனங்குப்பம் மீனவர்கள் தாக்கியதில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் 7பேர் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் அனைவரையும் கைது செய்ய கோரி 12 கிராம மீனவ கூட்டமைப்பினர் கடந்த 9ஆம் தேதி பழவேற்காடு பஜாரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த கும்பல்...

சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து மீனவர்களும் கைது செய்யப்படுவார்கள் என சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நடுவூர்மாதாகுப்பம் நிர்வாகி ஆரோக்கியராஜ் உள்ளிட்ட 50பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், வழி மறித்தல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 3பிரிவுகளில் திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்கள் 25பேர் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...