"ஹோம் மேட் க்ரீன் டீ"... ஒரு கிலோ ரூ. 5000 விற்பனை...

குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  அதிக லாபம் தரும் ஹோம் மேட் க்ரீன் டீ உற்பத்தி. ஒரு கிலோ டீ தூள் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

"ஹோம் மேட் க்ரீன் டீ"... ஒரு கிலோ ரூ. 5000 விற்பனை...

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பறிக்கும் பச்சை தேயிலையை கூட்டுறவு தொழிற்சாலை மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெறும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

ஆனால் க்ரீன் டீ, சில்வர் டீ, ஒயிட் டீ போன்ற டீ தூளில் அதிக லாபம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ஆர்கானிக் ஹோம் மேட் க்ரீன் டீ தயாரிப்பில் சிறு தொழிலாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இரண்டு இலையுடன் கூடிய அரும்பு  சேகரிப்பு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | உதகையில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை...!

அதனை வெப்ப நீராவி மூலம் உலர்த்த படுகிறது. பின்னர் அதனை சுமார் 6 மணி நேரம் காய வைக்கப்படுகிறது. பின்னர் கைகளால் அவற்றை தேய்த்து 17 டிகிரி வெப்பநிலையில் மீண்டும் பதப்படுத்தப்படுகிறது. பின்னர் அவற்றை விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 5 கிலோ வரை தேயிலை சேகரிக்கப்படுகிறது. இந்த ஆர்கானிக் ஹோம் மேட் க்ரீன் டீ ஒரு கிலோ 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண தேயிலைக்கு விலை இல்லாத நிலையில் இது போன்ற க்ரீன் டீ க்கு சந்தையில் மவுசு அதிகமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | மலைகளின் அரசியின் கோடை கால விழா எப்போது தெரியுமா?