பேரிக்காய் மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்...

கொடைக்கானலில் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக பேரிக்காய் மரங்கள் பூ பூக்க தொடங்கியுள்ளது.

பேரிக்காய் மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்...

திண்டுக்கல் | கொடைக்கானலில் பேரிக்காய் ,ப்ளம்ஸ் ,அவக்கோடா, பிச்சிஸ் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கொடைக்கான‌ல் ப‌குதிக‌ளான‌ ப‌ள்ள‌ங்கி ,வில்ப‌ட்டி ,செண்ப‌க‌னூர் , பாம்பார்புர‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் பேரிக்காய்   விவ‌சாய‌ம் செய்து பாராம‌ரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு விளைவிக்கப்படும் பழ வகைகளை விரும்பி வாங்கிச் செல்வ‌ர். கொடைக்கானலில் இருந்து பேரிக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

மேலும் படிக்க | சாலையில் வீறுநடை போட்ட யானையைப் பார்த்து, தலைதெறிக்க ஓடிய மக்கள்...

ஆண்டுக்கு ஒரு முறை விளையும் பேரிக்காய்கள் வருடத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அறுவடை செய்யப்படும். தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக ஒரு சில மரங்களில் இப்போது பேரிக்காய் மரங்கள் பூ பூக்க தொடங்கியது.

தற்போது பூக்கும் பேரிக்காய் மரங்கள் ஏப்ரல் மே மாதங்களில் காய் காய்த்து வழக்கமான அறுவடைக்கு முன்னதாக அறுவடை செய்ய ஏதுவாக தற்போது பூ பூத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | விடுதியில் விபச்சாரம் நடத்திய 3 போ் கைது...