படவேட்டம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள படவேட்டம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

படவேட்டம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை...

திருவள்ளூர் | திருத்தணியில் முருகன் கோயில் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோயில் சார்பில் உலக நன்மை வேண்டி, திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற, குழந்தை வரம் வேண்டி, மேலும் மழை வேண்டி சிறப்பு குத்துவிளக்கு பூஜை திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர், சிறப்பு அலங்காரத்தில் படவேட்டம்மன் உற்சவர் சிலை முன்பு அம்மன் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, குத்துவிளக்கு பூஜையில் பெருந்திறல் பங்கேற்ற பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மற்றும் திருக்கோயில் பிரசாதங்கள் ஆகியவை திருக்கோயில் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் தெப்பத்திருவிழா...