பல் மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்...

பல் மருத்துவர் வீட்டிற்குள் புகுந்து 5 சவரன் தங்க நகை மற்றும் செல்போஃன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல் மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்...

புதுச்சேரி | நகரப்பகுதியான கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் பல் மருத்துவர்  ஜெயக்குமார் (47), இவர் தனது மனைவி, மகள் மற்றும் அவரது தாயார் உடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 3:30 மணியளவில் குடும்பத்துட்டுன் இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் பின்பக்க கதவை கம்பியால் நீக்கி தனது தாய் தலை அருகே 5 சவரன் தங்க செயின் மற்றும் 2 – செல்போஃன்கள் திருடி சென்றுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டதை அடுத்து எழுந்த ஜெயகுமார் உடனடியாக இது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுற்றி உள்ள பகுதிகளில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

மேலும் படிக்க | கணவரின் இறுதி சடங்கிற்கு சென்ற பெண்ணின் வீட்டில் நடந்த கொள்ளை...

அப்போது புதுச்சேரி ரயில் நிலையம் அருகே மருத்துவர் கூறிய அடையாளங்களுடன் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.

அதில் பையில் பல் மருத்துவர் வீட்டில் திருடிய நகை மற்றும் செல்போன்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர்  திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது

இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்து திருடப்பட்ட  5சவரன் நகை மற்றும் 2 செல்போஃன்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை அப்டேட்....முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு  மணிகண்டன் சீராரக இருந்த போது ஒரு  வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்,

அதே போல் புதுச்சேரி நகரப்பகுதியில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில் முக்கிய குற்றவாளிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தி வரும் நிலையில் தொடர் இரு சக்கர வாகன திருட்டை தடுக்க இரவு நேரங்களில் வாகன் தணிக்கை செய்து வருவதாக ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பிரபல கோனிகா கலர்லேப் நிறுவனர் வீட்டில் நடந்தேறிய கொள்ளை சம்பவம்... தீவிர விசாரணையில் போலிசார்!!!