எதே... வழி விடமாட்டியா? அடிதடியில் இறங்கிய போதை ஆசாமிகள்...

குமரியில் வழி விடவில்லை என கூறி போதை ஆசாமிகளின் அட்டூழியம் செய்து, அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எதே... வழி விடமாட்டியா? அடிதடியில் இறங்கிய போதை ஆசாமிகள்...

கன்னியாகுமரி | முக்கூட்டுக்கல் சந்திப்பில் இருந்து குழித்துறை பணிமனைக்கு 86B பேருந்து திருப்பும் போது, 3 இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஆறு நபர்கள். தங்களுக்கு வழி விடவில்லை என கூறி திடீரென பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் - ரெஜி குமார் மற்றும் நடத்துனர் - கனகராஜ் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, நடத்துனரின் கைப்பையை புடுங்கி பேருந்தின் வெளியே வீசி உள்ளனர்.

மேலும் படிக்க | பாம்பு கடி -சிகிச்சைக்கு தாமதம் - பலனின்றி உயிரிழந்த சிறுவன்

அது மட்டுமின்றி, அவர்களது சட்டையை கிழித்தும் அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர். கைபையில் இருந்த ரூபாய்கள் சாலையில் சிதறி பறந்தும், பயணச்சீட்டுகள் ஆங்காங்கே சிதறியும் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் நடத்துனரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்பு உயர் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடத்துனரின் வலது கையில் சிறு விரல் முறிவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பொங்கல் பரிசாக 5000 வழங்க சொன்ன திமுக...இப்போ 1000 வழங்க காரணம் என்ன? ஈபிஎஸ் கேள்வி!

இது குறித்து காவல்துறையினரின்  முதல் கட்ட விசாரணையில் மது போதையில் ஆறு நபர்கள் இச்செயலை செய்திருப்பதாகவும் ராஜ் என்று அழைக்கக்கூடிய செல்வராஜ், ஜெயேஷ், நந்து, கைலு ஆகிய நான்கு நபர்களை அடையாளம் கண்டு கொண்டதாகவும் இரு நபர்களுடைய பெயர் விபரம் இன்னும் தெரியவில்லை என தெருவித்துள்ளனர்.

தற்போது அரசு பேருந்து அருமனை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது .இது போன்ற போதை அட்டகாசங்களை உடனடியாக தடுக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  கோரிக்கை.

மேலும் படிக்க | போலீஸ்காரர்கள் என் புள்ளைய அடித்தே கொன்னுட்டாங்க கதறும் தாய்