35 வருடங்களாக செயல்பபட்டு வந்த அரசு பள்ளி,.. மாணவர்கள் வராததால் மூடப்பட்டது...!

35 வருடங்களாக செயல்பபட்டு வந்த அரசு பள்ளி,.. மாணவர்கள் வராததால் மூடப்பட்டது...!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே 35 வருடங்களாக செயல்பபட்டு வந்த அரசு பள்ளி, படிக்க மாணவர்கள் இல்லாமல் இழுத்து மூடப்பட்டது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தமிழகத்தின் கடைக்கோடி எல்லையில் அமைந்துள்ளது எப்ரி கிராமம். இந்த கிராமம் தமிழக எல்லையிலும் கர்நாடக மாநில எல்லை பகுதியிலும் அமைந்துள்ளது.  இந்த கிராமத்தில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கடந்த 35 வருடங்களாக இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பக் கல்வி பாடங்கள் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30 முதல் 40 மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது இந்த கிராமத்தில் பள்ளிக்கு செல்ல குழந்தைகள் யாரும் இல்லாததால் இந்த பள்ளி செயல்படாமல் இழுத்து மூடப்பட்டுள்ளது.
 
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்:-
 
 இந்த கிராமத்திற்கு தமிழகத்தின் கடைக்கோடி எல்லையில் அமைந்திருப்பதால் போதுமான பேருந்து வசதிகள் சாலை வசதிகள் ஏதும் இல்லை எனவும், அதனால் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் அனைவரும் நகரத்தை நோக்கி சென்று விட்டனர். தற்போது கிராமத்தில் உள்ள குழந்தைகள் யாரும் இங்கு படிப்பதற்கு இல்லை. பெரியோர்கள் மட்டுமே ஊரில் வசித்து வருகின்றனர். இதனால் தற்போது பெற்றோர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்று தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகள் அனுப்பி வருகின்றனர். 
 
இதனால் தற்போது பள்ளியில் மாணவர்கள் படிக்க இல்லாமல் அரசு பள்ளி இழுத்து மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பள்ளி மூடப்படாமல் கிராமத்திற்கு பொது நூலகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அந்த நூலகமும் மூடப்பட்டு தற்போது பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
 
 பள்ளி மாணவர்களுக்காக அரசு அழகான கட்டிடத்தை அமைத்து அதற்கான சமையல் கட்டிடத்தையும் அமைத்து கொடுத்தும் ஆசிரியர்கள் இருந்தும் பள்ளி மாணவர்கள் இல்லாமல் அரசு பள்ளி மூடப்பட்ட சம்பவம் கிராம மக்களையும் சுற்றுவட்டார கிராமத்தையும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.