பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு: திருச்செந்தூரை சேர்ந்த மாணவி முதலிடம்...!

பொறியியல் கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு:  திருச்செந்தூரை சேர்ந்த மாணவி  முதலிடம்...!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழத்தின்கீழ் இயங்கும் 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்த மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  சென்னை கிணிடியில் வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்“களிடம் பேசிய அவர். திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா பொறியியல் முதலிடமும், அரூரை சேர்ந்த மாணவி ஹரிணிகா இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம்  28-ம் தேதி வரை நடைபெறும் என கூறிய அமைச்சர் பொன்முடி, 22 லட்சத்து 92 ஆயிரம் விண்ணப்பங்களில் ஒன்றரை லட்சம் பேரின் சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதையடுத்து, தர வரிசைப் பட்டியலில் 102 மாணவர்கள், 200-க்கு 200 என கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் பொன்முடி, அரசுப் பள்ளிகளில் 200/200 கட் ஆஃப் பெற்று சைதாப்பேட்டையை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளதாக கூறினார். மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்வி கொள்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிக்க    | மகளிருக்கு ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டம்...முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!