MBBS மற்றும் BDS மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு...!

MBBS மற்றும் BDS மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு  தேதி அறிவிப்பு...!

2023-2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக காலந்தாய்வு 25 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவுகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெற்றது.  
 
7.5% இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்ததனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13 ஆயிரத்து 179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு  இரண்டாயிரத்து 993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  
 
அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது.  அதன் பின் தமிழ் நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு கடந்த 25 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 
 
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் ஆனால் இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது.  இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.  
அதிலும், சிறப்புப் பிரிவு மாணவர்களாக உள்ள 7.5 உள் இட ஒதுக்கீடு பிரிவில் 622  மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு  ஆயிரத்து 300 மாணவர்கள் அழைப்புதளும், விளையாட்டு பிரிவு  இடங்களுக்கு 25 மாணவர்களுக்கு அழைப்புதளும், இராணுவ வீரர்கள் வாரிசு பிரிவில்,, 25 பேருக்கு அழைப்புதளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 80 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 
 
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது என மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர் கூறியுள்ளார். 
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் மருத்துவக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 7.5%  சதவீத இட ஒதுக்கீட்டில் கீழ் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இட ஒதுக்கினை தமிழக அரசு வழங்கி வருகிறது அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு 623 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டது. 
 
அரசுப் பள்ளியில் பயின்று 7.5% சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழக அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள் பெருமிதத்துடன் மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பெற்று பிறகு தங்களின் கனவு நிறைவேறியதாக கூறினார். 
மேலும், ஆகஸ்ட் 1,2 ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும் அதன் பின் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், ஆகஸ்ட் 8ஆம் தேதி இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.