பீஸ்ட் படத்தில் 2 ஹீரோயின்களுடன் விஜய்... இளம் நடிகை வெளியிட்ட வைரல் பதிவு.!!

பீஸ்ட் படத்தில் 2 ஹீரோயின்களுடன் விஜய்... இளம் நடிகை வெளியிட்ட வைரல் பதிவு.!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்கள் தவிர விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

டெல்லியில் நடைபெற உள்ள ஒரு வார படப்பிடிப்பு முடிந்த பின்னர் பீஸ்ட் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளார்களாம். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் படம் என்றாலே அதற்கென தனி வரவேற்பு எப்போதும் இருக்கும். அதிலும் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் விஜய்யுடன் இணைந்துள்ளதாலும், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாலும் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.