பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,  களைகட்டிய செம்மறி ஆடு விற்பனை..!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,  களைகட்டிய செம்மறி ஆடு விற்பனை..!

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாநகர பகுதிகளில் செம்மறி ஆடுகளின் விற்பனை களைகட்டியது. 

இஸ்லாமியர்களின் புனித பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வருகிற 28, 29-ந் தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி, குர்பானி கொடுப்பதற்காக செம்மறி ஆடுகள் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து கோவை நகருக்கு விற்பனைக்கு வந்துள்ளன கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்திவைக்கபட்டுள்ள கிடாய் ஆடுகள் ரூ 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யபடுகிறது

இது குறித்து ஆடு வியாபாரி கூறும்போது கூறும்போது:-

கோவை மாநகர பகுதிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டின் விலை முப்பது ஆயிரம் எனவும் குறைந்த பட்சம் இந்த 10 நாட்களில்   5 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். 

மேலும், கோவை  உக்கடம் போத்தனூர் கரும்புக்கடை கோட்டைமேடு பொன்விழா நகர் போன்ற பகுதிகளில் 
ஆட்டு வியாபாரம் சூடு பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து செம்பட்டி,  மதுரை, திண்டுக்கல் பல்லடம் போன்ற சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டதாகவும், 

ஆட்டுக்குத் தேவையான புல் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்டன. இந்த புல்லின் விலை ஒரு கட்டு 30 ரூபாய் ஆகும். இந்த பத்து நாட்களில் புல் வியாபாரம் மற்றும் 2 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும்,  எனவும்  தெரிவித்தார்.


இதையும் படிக்க     | மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; தடைவிதித்த நீதிமன்றம்!