சென்னை: காமதேனு கூட்டுறவு அங்காடியில் 1 கிலோ தக்காளி ரூ.58-க்கு விற்பனை..!

சென்னை:  காமதேனு கூட்டுறவு அங்காடியில்   1 கிலோ தக்காளி ரூ.58-க்கு விற்பனை..!

சென்னையில், காமதேனு கூட்டுறவு அங்காடிகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

காமதேனு கூட்டுறவு அங்காடியில் நேற்றுவரை  60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இரண்டு இன்று ரூபாய் விலை குறைந்து 58 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்தும்  வகையில் இன்று முதல்  பசுமை பண்ணை கடைகளில் 58 ருபாக்கு  தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை,  ராஜா அண்ணாமலைபுரம், கீழ்பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள காமதேனு கூட்டுறவு பசுமை பண்ணை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் உள்ள 82 நியாய விலை கடைகளிலும் 58 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு வார காலமாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடந்த வாரங்களில் பசுமை பண்ணை கடைகளிலும் அதனை தொடர்ந்து நியாய விலை கடைகளிலும் 60 ரூபாய்க்கு தக்காளி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் முதல் ரக தக்காளியை குறைந்த விலையில் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து உள்ளது மக்களுக்கு அதிகபட்சமாக 2 கிலோ வரையிலுமே ஒரு நபருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க    | சூளகிரி: தட்பவெப்ப நிலை காரணமாக தக்காளி செடிகள் நாசம்,. விவசாயிகள் வேதனை..!