அதானி விமான நிலையத்தின் பெயர் பலகை உடைப்பு..!!!

மும்பை விமான நிலையத்தின் பெயரை அதானி விமான நிலையம் என மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதானி விமான நிலையம் என்ற பெயர் பலகையை சிவசேனா கட்சியினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை சர்வதேச விமான நிலையம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் வாங்கியுள்ளது.

இதையடுத்து அதானி விமான நிலையம் என்ற எழுத்துக்கள் வளாகத்தில் பொறிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயர் மாற்றப்படுவதை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.